Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Monday, September 9, 2013

மோடியை கைது செய்யுங்கள்! பரபரப்பு!?

போலி என்கவுண்டர் வழக்குகள் தொடர்பாக தற்போது சிறையில் உள்ள குஜராத் முன்னாள் டி.ஐ.ஜி வன்சாரா, அம்புகளை விட்டு விட்டு அம்பை ஏவிய நரேந்திர மோடி மற்றும் அமித் ஷாவைக் கைது செய்யுமாறு எழுதியுள்ள ராஜினாமா கடிதம் அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. (காவிபயங்கரவாதி மோடியை அம்பலப்படுத்தி அப்ரூவர் ஆகும் வல்சரா!. எங்களை ஏவிய மோடியை கைது செய்யுங்கள் குஜராத் டி.ஐ.ஜி வன்சாரா பரபரப்பு கடிதம்.

யார் இந்த வன்சாரா?. 2007ல் சிறையில் அடைக்கப்படும் வரை குஜராத்தின் ‘Super Cop’ ஆக எல்லா அதிகாரமும் பெற்று திகழ்ந்தவர் தான் டி. ஜி. வன்சாரா குஜராத் மாநில டி.ஜி.பியாக இருந்த வன்சாரா நரேந்திர மோடிக்கு நெருக்கமானவராகவும் என்கவுண்டர் சிறப்பு அதிகாரிகளின் தலைவராகவும் இருந்தவர்.

சொஹ்ராபுதீன் என்கவுண்டர் வழக்கில் 2007ல் கைது செய்யப்பட்ட இவர் தற்போது இடைக்கால பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளார். கடந்த 6 ஆண்டுகளாக சிறையிலடைக்கப்பட்டுள்ள வன்சாரா, மனம் வெறுத்து தம் பதவியை ராஜினாமா செய்து எழுதியுள்ள தன் பத்து பக்க ராஜினாமா கடிதத்தில், மோடியின் வலதுகரமான அமித் ஷாவையும் மோடியையும் கடுமையாக விமர்சித்துள்ளார். அவரின் 10 பகக கடிதத்திலிருந்து வாசகர்களுக்காக சில முக்கிய துளிகள் மட்டும்:

1) குஜராத்தில் 2002 முதல் 2007 வரை நடைபெற்ற அனைத்து என்கவுண்டர்களும் அரசு உத்தரவின் படியே நடைபெற்றது. அரசின் உத்தரவையே காவல்துறை அதிகாரிகள் நிறைவேற்றினர்.

2) குஜராத் மாநிலத்தில் மட்டும் தான் 32 காவல்துறை அதிகாரிகள் என்கவுண்டர் வழக்குகள் தொடர்பாக சிறையில் உள்ளனர். இவர்களை விடுவிக்க அரசு எம்முயற்சியும் எடுக்காதது, அரசு தன் புதைகுழியைத் தானே தோண்டுவதற்குச் சமமானது.

3) காவல்துறை அதிகாரிகளுக்கு மத்தியில் பிரித்தாளும் சூழ்ச்சியை மேற்கொண்டதோடு காரியம் முடிந்தவுடன் அவர்களை உதாசீனப்படுத்தியவர் அமித்ஷா.

4) நான் கடவுளாக நினைத்திருந்த மோடிக்காக தான் இது வரை மெளனம் காத்தேன். ஆனால் அமித் ஷாவின் தீய சகவாசத்தின் காரணமாக என் கடவுள் என்னைக் காப்பாற்ற வரவில்லை.

5) டெல்லிக்குச் செல்லும் அவசரத்தில் உள்ள மோடி முதலில், தாம் திறமையான முதல்வர் என்று பெயரெடுத்திருப்பதற்குக் காரணமான 32 காவல்துறை அதிகாரிகளுக்குச் செலுத்த வேண்டிய கடனைத் திருப்பி செலுத்தட்டும்.

6) அமித்ஷாவை விடுவிக்க மிக அதிகப்பணம் ஊதியமாக கொடுத்து சிறந்த வழக்கறிஞரான ராம் ஜெத்மலானியை அமர்த்திய மோடி, தாம் உயர காரணமான காவல்துறை அதிகாரிகளை விடுவிக்க தவறி விட்டார்.

7) அரசின் உத்தரவை அமுல்படுத்திய நானும் என் சக காவல்துறை அதிகாரிகளின் நடவடிக்கைகளும் தவறெனில், நாங்கள் சொன்னதைச் செய்த அம்புகள் மட்டுமே. எங்களை இயக்கிய (காவிபயங்கரவாதி மோடி, அமித் ஷா போன்றோரை) அரசைச் சிறையில் அடைத்து தண்டனை வழங்குங்கள். இவ்வாறு அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

1 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!